நான் இந்திரா காந்தி பேத்தி டா…இதெல்லாம் எனக்கு அசால்ட்; பிரியங்கா செய்த துணிச்சல் காரியம்!

  0
  12
  பிரியங்கா காந்தி

  இந்திராகாந்திக்கு துணிச்சல் என்பது பிறவிக்குணம். அரசியலில் அவர் அபரிமிதமான வெற்றியைப் பெற்றதற்கும் தோல்வியின் அதலபாதாளத்தில் இருந்து மீண்டதற்கும் அவரது துணிச்சலே காரணம் என்பார்கள் அவரை விமர்சித்தவர்களும்

  லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரியங்கா காந்தி செய்த துணிச்சல் மிகுந்த காரியம், மீண்டும் அவரை அவரது பாட்டியுடன் ஒப்பிட்டு பேச வைத்துள்ளது.

  இந்திராகாந்திக்கு துணிச்சல் என்பது பிறவிக்குணம். அரசியலில் அவர் அபரிமிதமான வெற்றியைப் பெற்றதற்கும் தோல்வியின் அதலபாதாளத்தில் இருந்து மீண்டதற்கும் அவரது துணிச்சலே காரணம் என்பார்கள் அவரை விமர்சித்தவர்களும்.

  priyanka, indira

  இந்திரா காந்தியைப் பற்றி இரண்டு விதமாகச் சொல்வார்கள் ஒன்று எமர்ஜென்சியை பிரகடனப்படுத்தியவர், மற்றொன்று துணிச்சல் மிகுந்த இரும்பு பெண்மணி. நேருவை விமர்சித்தவர்கள் கூட, இந்திராவின் துணிச்சலை பாராட்டத் தவறவில்லை. நினைத்துப்பார்க்க முடியாத திருப்பங்கள், நம்ப முடியாத வெற்றிகள், காட்டாற்று வெள்ளம் போல் எதற்கு அஞ்சாமல் பயணித்தது அவருடைய வாழ்க்கை.

  priyanka gandhi

  இந்திராவின் துணிச்சலை பட்டியலிட பல்வேறு விஷயங்கள்உள்ள நிலையில், அவருடன் அடிக்கடி ஒப்பிட்டு பேசப்படுபவர் பிரியங்கா காந்தி. அவர்  உடை உடுத்தும் ஸ்டைல், பேசும் பாணி, தலைமுடி அலங்காரம் உள்ளிட்டவை இந்திரா காந்தியை போல அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

  உணர்ச்சிவசப்படாத பிரியங்கா காந்தியின் மனநிலை, அரசியல் மற்றும் செயல்படும் பாணி ஆகியவை இந்திரா காந்தியிடம் இருந்து மாறுபட்டிருக்கும் என கூறப்பட்டாலும், இந்திராவை போன்று எளிதாக மக்களுடன் கலந்து நிற்கும் திறன் பிரியங்காவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

  rahul, priyanka

  இரும்புப் பெண்மணி இந்திராவின் முகத்தில் ஒரு உறுதிப்பாடு தெரியும். ஆனால், மக்களுடன் கலந்துவிட்டால் அவர் அன்பானவராக மாறிவிடுவார். எனவே, அவர் மீது மக்களுக்குப் பிரியம் இருந்தது. அதுபோல தான் பிரியங்காவும். ஆனால், அவர் நேரடி அரசியலில் ஈடுபடாமல் விலகியே இருந்தார். எனினும், தன்னுடைய சகோதரர் ராகுல் காந்திக்காகவும், தாயார் சோனியா காந்திக்காகவும் மட்டுமே தேர்தல் சமயங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அவரை, கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் பொறுப்பாளராகவும், காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் அக்கட்சி தலைமை நியமித்தது.

  இதையடுத்து, தேர்தல் களத்தில் சூறாவளியாக சுழன்று வரும் பிரியங்கா காந்தி, ரேபரேலி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது, பாம்பாட்டிகளை சந்தித்தார். அப்போது அவர்களுடன் கலந்துரையாடிய அவர், எவ்வித அச்சமும் இன்றி அசால்ட்டாக பாம்புகளை கையில் எடுத்து தூக்கினார். இது பார்ப்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.