‘நான் ஆம்பள நான் ஆம்பள என்று தனக்குத்தானே ஊளையிடுகிறார்கள்’ : வி ஆர் தி பாய்ஸ் கேங்கை சாடும் கஸ்தூரி

  0
  7
  வி ஆர் தி பாய்ஸ்

  வீ ஆர்  தி பாய்ஸ் கேங்கான தர்ஷன், கவின், சாண்டி, முகேன் உள்ளிட்டோர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர்

  வீ ஆர்  தி பாய்ஸ்  நிகழ்ச்சி குறித்து நடிகை கஸ்தூரி அதிருப்தி தெரிவித்துள்ளார். 

  பிக் பாஸ்  3  நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டது. மற்ற சீசன்களை காட்டிலும் பிக் பாஸ் சீசன் 3  மிகவும் சிறப்பாக இருந்ததாகப் பலரும் கூறி வருகின்றனர்.

  bb

  குறிப்பாக இந்த சீசனில் காதல், சண்டை, நட்பு என பார்வையாளர்களைக் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்ததாலும் போட்டியாளர்கள் சாகப்போட்டியாளர்களின் வீடுகளுக்கு செல்வது, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என ஜாலியாக உள்ளனர்.

  kasturi

  அந்த வகையில் வீ ஆர்  தி பாய்ஸ் கேங்கான தர்ஷன், கவின், சாண்டி, முகேன் உள்ளிட்டோர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அதில் தங்களின் பிக் பாஸ் அனுபவங்கள் குறித்தும், சக போட்டியாளர்களைக் குறித்துப் பேசியும் இருந்தனர். மேலும் பெண் போட்டியாளர்களை போல நடித்து காட்டும் டாஸ்க், பவர் பாட்டி  என நிகழ்ச்சி கலகலப்பாகச் சென்றது. முன்னதாக இதற்கான புரொமோ  வீடியோவும் ஒளிபரப்பானது.

   

  இந்நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில், நான் ஆம்பள நான் ஆம்பள என்று தனக்குத்தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே? என்று கூறி சாடி உள்ளார்.

   

  இதற்கு  மதுமிதாவின் கணவர் மோசஸ் , ‘ஆணென்ன? பெண்ணென்ன? எல்லாம் ஓரினம் தான். இதுவும் பாடல் தான். விஷத்தை தேன்  கலந்து சாப்பிட வைக்கிறீர்கள்… சுவையாக இருப்பதால் நாமும் சாப்பிடுகிறோம். வி ஆர் தி பாய்ஸ் ஒரு தவறான விஷயம் என்று டேக் போட்டுள்ளார். இதற்கு சிலர் ஆதரவாகவும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து கூறி வருகின்றனர்.