நான் அப்படி சொல்லவே இல்லங்க… மிரளும் தமிழிசை

  0
  1
  Tamilisai

  அதிமுகவினர் யாகம் செய்ததால் மட்டுமே தமிழகத்தில் மழை வந்தது என்று நான் சொல்லவில்லை அனைத்து மதத்தினரும் வேண்டுதலின்படிதான் மழை பெய்து வருகிறது என சொல்லினேன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

  அதிமுகவினர் யாகம் செய்ததால் மட்டுமே தமிழகத்தில் மழை வந்தது என்று நான் சொல்லவில்லை அனைத்து மதத்தினரும் வேண்டுதலின்படிதான் மழை பெய்து வருகிறது என சொல்லினேன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஒரு வாரமாக ஸ்டாலின் எங்கே என்று மக்கள் கேட்கிறார்கள் நாங்களும் கேட்கிறோம் ஸ்டாலின் எங்கே போயிருந்தார். ஒரு வாரம், கடும் தண்ணீர் பிரச்னையில் மக்கள்  கஷ்டம் படும் போது, ஸ்டாலின் எங்கே சென்றார். 

  திமுகவினர் எல்லா காரியங்களையும் நேரம் பார்க்காமல் செய்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? அவர் குடும்ப உறுப்பினர்கள் மறைந்தது, மறைந்து சாமி கும்பிடுவது ஏன்? மழை வேண்டி யாகம் நடத்தியது நம்பிக்கையில் அடிப்படையில் தான், இறை நம்பிக்கை இருக்கிறது. அதிமுகவினர் யாகம் செய்ததால் மட்டுமே தமிழகத்தில் மழை வந்தது என்று நான் சொல்லவில்லை அனைத்து மதத்தினரும் வேண்டுதலின்படிதான் மழை பெய்து வருகிறது என சொல்லினேன்.

  இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருக்கும் நடமாடும் கடல்நீரை குடிநீராக்கும் வாகனம் தமிழகத்திற்கும் தேவை. எல்லோரும் மழைநீரை சேகரிக்க வேண்டும். எனது வீட்டில் கூட மழை நீரை சேகரிக்கக்கூடிய தொட்டி உள்ளது. அதுபோல ஒவ்வொரு நபரும் அவர்களது வீட்டில் மழை நீரை சேமிக்க வேண்டும். தமிழகத்தில் ஐந்து முறை திமுக ஆட்சி செய்திருக்கிறது, காமராஜர் காலத்திற்கு பிறகு அணைகள் கட்டப்படவில்லை. ஆனால் ஸ்டாலின் புதுப் பிறவி எடுத்தது போல் பேசுகிறார். மற்றொரு பக்கத்தில் நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் புதுப் பிறவி எடுத்தது போல் பேசுகிறார்” என்று கூறினார்.