நான் அதை சூர்யா போனில் பார்த்தேன் : நடிகை ஜோதிகா ஓபன் டாக்!

    0
    2
    பரேலி

    ஜோதிகா நடிப்பில் புதுமுக இயக்குநர் கௌதம்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ராட்சசி.  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ். ஆர் பிரபு தயாரித்துள்ள இந்த படத்தில் பூர்ணிமா பாக்கிய ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஜோதிகா நடிப்பில் புதுமுக இயக்குநர் கௌதம்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ராட்சசி.  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ். ஆர் பிரபு தயாரித்துள்ள இந்த படத்தில் பூர்ணிமா பாக்கிய ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  முழுக்க அரசுப்பள்ளியை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. 

    அதில் ஜோதிகா பேசியதாவது, ‘நான் இந்தப் படத்திற்கு ஒத்துக்கொண்டதே இப்படம் சொல்ல வரும் விசயத்துக்காகத் தான். அரசு பள்ளிக்கூடங்கள் எப்படி இயங்க வேண்டும் என்பதை மையப்படுத்தி படங்கள் வந்திருந்தாலும் இது முற்றிலும் மாறுபட்ட பார்வையைக் கொண்டிருந்தது.

    jo

    படத்தின் ட்ரைலர் வந்தவுடனே எல்லோரும் என்னைப் பெண் சமுத்திரக்கனி, சாட்டை படம் மாதிரியே இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் சொல்லியிருந்தார்கள். நான் எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லை. சூர்யா போனில் தான் பார்த்தேன். இது கண்டிப்பாகக் காப்பி இல்லை. அப்படியே இது காப்பியாக இருந்தாலும் இந்த விசயத்தை பேச இன்னும் நிறைய படங்கள் வர வேண்டும் என்று நினைக்கிறேன். இன்னும் எத்தனை படம் இந்த விசயத்தைப் பேசி வந்தாலும் நான் சந்தோசப்படுவேன். இன்னும் நிறையப் படங்கள் வர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.