நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ராம நவமி வாழ்த்து தெரிவிப்பு

  0
  4
  ram Navami

  பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ராம நவமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  டெல்லி: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ராம நவமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  இந்து மதத்தில் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் என்று நம்பப்படும் ஸ்ரீ ராமரின் பிறந்த நாளை ராம நவமி என கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நாடு முழுவதும் மக்கள் ராம நவமியை கொண்டாடி வருகின்றனர். துர்கா தெய்வத்திற்கு பிரார்த்தனை செய்யப்படும் ஒன்பது நாள் இந்து பண்டிகையான நவராத்திரியின் முடிவில் ராம நவமி வருகிறது.

  இந்து நாட்காட்டியில் சைத்ரா மாதத்தின் ஒன்பதாம் நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரி முழுவதும் நோன்பைக் கடைப்பிடித்து வரும் பக்தர்கள், இந்த நாளில் நோன்பை முடித்துக் கொள்கிறார்கள்.

  இந்த ஆண்டு நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு விதித்திருப்பதால் இந்து மத பக்தர்கள் கோவிலுக்கு சென்று கடவுளை வணங்க முடியாத சூழல் நிலவுகிறது. வீட்டிலேயே இந்த நாளில் மக்கள் ராமரிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.

  இந்த நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ராம நவமி வாழ்த்து தெரிவித்துள்ளார். “ராம நவாமியின் புனித நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஜெய் ஸ்ரீ ராம்!” என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.