நாட்டுக்கு நல்லதுன்னா தப்பில்லை- நிர்மலா சீதாராமன்…

  0
  2
  நிர்மலா சீதாராமன்

  கடனுக்கான வட்டியை குறைத்தால் நாட்டுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் ஆகையால் ரெப்போ ரேட்டை குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக்கொள்கை கூட்டம் ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் வட்டி குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பத்திரிகை ஒன்று அளித்த பேட்டியில் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது:

  ரிசர்வ் வங்கி

  வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நான்  உண்மையில் வட்டி குறைப்பை வரவேற்கிறேன். கணிசமான வட்டி குறைப்பு நாட்டுக்கு அதிக அளவில் பலன்களை அளிக்கும். இந்திய சந்தைகளில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான உபரிவரி உயர்வு நடவடிக்கை அவர்களை பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யவில்லை. 

  அமெரிக்க டாலர்

  சர்வதேச கரன்சி பத்திரம் வெளியீடுவது தொடர்பாக நான் மறுயோசனை செய்யவில்லை. யாரையும் மறுஆய்வு செய்யும்படி சொல்லவும் இல்லை. இவ்வாறு தெரிவித்து இருந்தார்.  மத்திய நிதியமைச்சரே வட்டியை குறைக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்து இருப்பதால், ரிசர்வ் வங்கி தனது அடுத்த கூட்டத்தில் கடனுக்கான வட்டியை குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.