நாடாளுமன்ற தேர்தலில் தமிழக கட்சிகளின் வாக்கு சதவீத விவரம்

  14
  Vote Share

  போட்டியிட்ட 23 தொகுதிகளிலும் வென்ற திமுக, 32.76% வாக்குகளை பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 12.76, சிபிஐ 2.44%, சிபிஎம் 2.40, முஸ்லீம் லீக் 1.11% வாக்குகளையும் பெற்றுள்ளன. திமுக கூட்டணியில் தேனி காங்கிரஸ் வேட்பாளரான இளங்கோவன் மட்டும் தோற்றுள்ளார்

  வேலூர் தவிர்த்து மற்ற 38 தொகுதிகளுக்கான தேர்தலில், போட்டியிட்ட 23 தொகுதிகளிலும் வென்ற திமுக, 32.76% வாக்குகளை பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 12.76, சிபிஐ 2.44%, சிபிஎம் 2.40, முஸ்லீம் லீக் 1.11% வாக்குகளையும் பெற்றுள்ளன. திமுக கூட்டணியில் தேனி காங்கிரஸ் வேட்பாளரான இளங்கோவன் மட்டும் தோற்றுள்ளார்.

  மறுபக்கம் அதிமுக கூட்டணியில் தேனி தொகுதியில் மட்டும் வென்று, கடந்த தேர்தலைவிட 36 தொகுதிகளை இழந்துள்ள அதிமுக, 18.49% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளான தேமுதிக் 2.19%, பாஜக 3.66%, பாமக 5.42% சதவீத வாக்குகளை பதிவு செய்துள்ளன.

  DMK Alliance

  முதன்முறை களம் கண்ட மக்கள் நீதி மய்யம் 5 இடங்களில்  மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 4.82% வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 3.85% வாக்குகளையும் பெற்றுள்ளன. கோயம்புத்தூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் ஒரு லட்சத்து 45,104 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

  Mahendran

  இதேபோலவே, வடசென்னை, தென் சென்னை, மற்றும் திருப்பெரும்புதூர் தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பெற்றுள்ளனர்.