நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்கு அவமரியாதை! – ராகுல் காந்தி கொந்தளிப்பு

  0
  1
  Rahul Gandhi

  ராகுல் காந்தி இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ராகுல் காந்தி அருகே தமிழக எம்.பி மாணிக் தாகூர் உள்ளார். ராகுல் காந்தி பேசும்போது, “நேற்று இந்திய வங்கிகளில் பணம் வாங்கி ஏமாற்றிய டாப் 50 மோசடியாளர்கள் பட்டியலை அளிக்கும்படி கேட்டேன்.

  நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அவமரியாதை செய்யும் சம்பவம் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
  ராகுல் காந்தி இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ராகுல் காந்தி அருகே தமிழக எம்.பி மாணிக் தாகூர் உள்ளார். ராகுல் காந்தி பேசும்போது, “நேற்று இந்திய வங்கிகளில் பணம் வாங்கி ஏமாற்றிய டாப் 50 மோசடியாளர்கள் பட்டியலை அளிக்கும்படி கேட்டேன். பொதுவாக உறுப்பினர் கேள்வி கேட்கும்போது, அது தொடர்பாக துணைக் கேள்விகளை எழுப்புவதும் வழக்கமான நடைமுறைதான்.

   

  ஆனால், நான் கேள்வி எழுப்பியபோது என்னைப் பேச விடாமல் சபாநாயகர் தடுத்தார். அவரது நிலை எனக்குப் புரிகிறது. என்னை அவமரியாதை செய்து பேசவிடாமல் தடுப்பது அவர்கள் பாணி என்பதால் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கு சில உரிமைகள் உள்ளன… அதை அவர்கள் பறித்துக்கொள்கின்றனர்… நான் அதைப் பொருட்படுத்துவது இல்லை. 
  இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாக, தமிழ் மொழி தொடர்பான கேள்விக்கு துணைக் கேள்வி ஒன்றை எழுப்ப முயன்றனர். இது தனிப்பட்ட நபர் சார்ந்தது இல்லை, ராகுல் காந்தியைப் பற்றியது இல்லை, தமிழ்நாடு மக்கள் மற்றும் அவர்கள் மொழி தொடர்பான விஷயம். அவர்களையும் துணை கேள்வி எழுப்ப அவர்கள் அனுமதிக்கவில்லை. இது தமிழக மக்களுக்கு செய்த முழு அவமரியாதை. தங்கள் மொழியை பாதுகாக்க, பேச அனைத்து உரிமையும் உள்ளது” என்று கூறியுள்ளார்.