நாடகத்தில் பாலியல் பலாத்கார சீன்! சன் டீவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்!! 

  0
  2
  serial

  நாடகங்களில் மோசமான பாலியல் பலாத்கார காட்சியை ஒளிபரப்பு செய்ததற்கு சன் டிவி நிர்வாகம் மன்னிப்பு கேட்கப்பட்டது. 

  kalyana veedu

  திரு பிச்சர்ஸ் தயாரிக்கும் கல்யாண வீடு நாடகம் சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கடந்த மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒளிபரப்பான தொடரில் சுமார் 30 விநாடிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பரப்பட்டது. குடும்ப பெண்களை முகம் சுழிக்க வைத்த இந்த காட்சிக்கு மன்னிப்பு கேட்கும்படியும், ரூ. 2,5 லட்சம் அபராதம் விதித்தும்  பிசிசிசி உத்தரவிட்டது. இதையடுத்து இந்த சம்பவத்திற்காக சன் டீவி மன்னிப்பு கேட்டுள்ளது.