“நாங்க டெல்லிக்கு போய்ட்டு நடவடிக்கை எடுத்து வாட்சப்ல  அனுப்புவோம்..” திமுக கையெழுத்து இயக்கத்தின் அட்ராசிட்டி!

  0
  1
  திமுக கையெழுத்து இயக்கம்

  திமுகவினர் கையெழுத்து இயக்கத்திற்காகக் கையில் பேப்பரும் பேனாவுமாக அலைந்து திரிகிறார்கள்.

  குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக திமுக கையெழுத்து இயக்கம் தொடங்கி நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 2 கோடி மக்களிடம் கையெழுத்து இயக்கத்தின் மூலம் கையெழுத்து பெற்றுள்ளதாக  அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இருப்பினும் பல்வேறு இடங்களில்  திமுகவினர் கையெழுத்து இயக்கத்திற்காகக் கையில் பேப்பரும் பேனாவுமாக அலைந்து திரிகிறார்கள்.

  ttn

  அந்த வகையில் ரஜினி ரசிகர்கள் திமுக கையெழுத்து இயக்கத்தின்  போது  எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ‘பெண்கள் இருவர் ஒருவரிடம் கையெழுத்து கேட்க, அந்த நபர் எதற்கு என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு அந்த பெண்கள் மோடி சட்டதிட்டம் சரியில்ல, நாங்க நடவடிக்கை எடுக்குறோம் கையெழுத்து போடு இல்லனா போ என்று அடாவடியாக பேச அந்த நபரும் (ரஜினி அரசியல் கட்சிக்காக காத்திருக்கும் ரசிகர்  போல ) அந்த பெண்களுக்கு கையெழுத்து இயக்கம் பற்றி தெரியவில்லை என்று அறிந்துகொண்டு துருவி துருவி கேள்வி கேட்டபடி வீடியோ எடுக்க அந்த பெண்கள் கடுப்பாகி நாங்க டெல்லிக்கு போய்ட்டு நடவடிக்கை எடுத்து வாட்சப்ல  அனுப்புவோம்….அப்புறம் போடு போ உன் கையெழுத்தே வேணாம் போ’ என்று கூறுகிறார்கள்.  இந்த வீடியோ  #ஏமாற்றும்_திமுக என்ற ஹேஷ்டாக்கில் டிரெண்டாகி வருகிறது.

  குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தும்  திமுக அதுபற்றி ஒரு தெளிவான புரிதலை கட்சியினரிடம்  விளக்கமளித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று நெட்டிசன்ஸ் கருத்து கூறி வருகிறார்கள்.