நாங்குநேரியில் போட்டியிடப் போகும் வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ்..!

  0
  2
  RP Manogaran

  திமுக வும் நாங்குநேரியில் புகழேந்தி போட்டியிடுவார் என்று கடந்த புதன் கிழமையே அறிவித்தது. ஆனால், நேற்று வரை காங்கிரஸ் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. 

  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும்  என்று அறிவிக்கப் பட்டதையடுத்து, நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் விக்கிரவாண்டியில் திமுக போட்டியிடும் என்றும் கூட்டணி கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் அறிவித்தன. 

  அதிமுக சார்பாக நாங்குநேரியில் வெ. நாராயணன் என்பவரும், விக்கிரவாண்டியில் முத்தமிழ் செல்வன் என்பவரும் இடைத்தேர்தலில் போட்டியிடுவர் என்று அறிக்கை வெளியிட்டது. திமுக வும் நாங்குநேரியில் புகழேந்தி போட்டியிடுவார் என்று கடந்த புதன் கிழமையே அறிவித்தது. ஆனால், நேற்று வரை காங்கிரஸ் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. 

  RP Manogaran

  இந்நிலையில், காங்கிரஸ் சார்பாக நாங்குநேரி தொகுதியில், சென்னையில் பிரபல கட்டுமான தொழிலதிபரான ரூபி மனோகரன் போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை இன்று அறிவித்துள்ளது. 

  Congress