நாங்குநேரியில் திமுக பணப்பட்டுவாடா : குண்டுக்கட்டாக சிறைபிடித்து மக்கள். நடந்தது என்ன..?

  0
  2
  DMK members

  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளதால் அப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது.

  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளதால் அப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது. தேர்தல்னா பணப்பட்டுவாடா இல்லாமலா..?!. நாங்குநேரியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூ.பி. மனோகரன் போட்டியிடுகிறார்.

  Nanguneri

  இந்நிலையில், திமுக கட்சியைச் சேர்ந்த எம்.எல் ஏ சரவண குமார் நாங்குநேரி மூலக்கடை பகுதியில் மக்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுக்க முயன்றுள்ளார். ஏற்கனவே, பட்டியலின மக்களைத் தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் பணம் கொடுக்க முயன்றதால் சரவணன் உள்ளிட்ட 5 பேரை மக்கள் நேற்று சிறைபிடித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தேர்தல் படையினர் மூலக்கடை பகுதியில் உள்ள வீட்டின் முன் சிதறிக் கிடந்த 2.78 லட்சம் ரூபாய் 2000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். அதனைதொடர்ந்து, வருமான வரித் துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

  DMK

  இதனிடையில், திமுக கட்சியின் ஒன்றிய செயலாளர் சுடலைக் கண்ணு, தேர்தல் பணிக்காக நாங்குநேரியில் தங்கியிருந்த எம்.எல்.ஏ வை தாக்கி, வீட்டுச் செலவுக்காக வைத்திருந்த பணத்தை மக்கள் எடுத்துச் சென்றுவிட்டதாக நாங்குநேரி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, காவல்துறையினர் எம்.எல்.ஏ பணம் கொடுக்க முயன்றாரா, அந்த பணத்தை திமுக கட்சியினர் எதற்காக வைத்திருந்தனர் என மக்கள் சிறைபிடித்த 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.