நாங்குநேரியில் தமிழிசையின் தந்தை போட்டி

  0
  3
  தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தந்தை

  நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் இன்று சத்தியமூர்த்தி பவனில் விருப்பமனு அளித்தார்.

  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார்.

  நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிக்கு அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதனையடுத்து திமுக கட்சித் தலைவர் ஸ்டாலின்  காங்கிரஸ் கட்சி நாங்குநேரியிலும் , விக்கிரவாண்டியில் திமுக-வும் போட்டியிடும் என்று அறிவித்தார்.

  திமுக கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களிடம் இருந்து இன்று விருப்பு மனுக்கள் பெறப்பட்டது.

  குமரி அனந்தன்

  இதில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் இன்று சத்தியமூர்த்தி பவனில் விருப்பமனு அளித்தார்.

  முன்னாள் காங்கிரஸ் கமட்டியின் தலைவரன இவர் நாகர்கோவில் எம்.பி.யாகவும், சாத்தான்குளம், ராதாபுரம் ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.