நாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்

  0
  16
  jayavilas

  சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா மட்டுமில்ல..மதுரை கீழ ஆவணி மூல வீதியில் வந்து ஜெயவிலாஸ் சாப்பாட்டுக் கடை எங்கேன்னு கேட்டா.சின்னக்குழந்தையும் சொல்லும். புது மண்டப வாசலில் இருக்கும் பெரிய நந்தி சிலை கிட்ட இருந்து அதிகபட்சம் 100 அடி தூரம் கூட கிடையாது.! மதுரைக்கு கிழக்கே இருந்து வரக்கூடிய ராமநாதபுரம் மாவட்ட மக்கள்

  சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா மட்டுமில்ல..மதுரை கீழ ஆவணி மூல வீதியில் வந்து ஜெயவிலாஸ் சாப்பாட்டுக் கடை எங்கேன்னு கேட்டா.சின்னக்குழந்தையும் சொல்லும். புது மண்டப வாசலில் இருக்கும் பெரிய நந்தி சிலை கிட்ட இருந்து அதிகபட்சம் 100 அடி தூரம் கூட கிடையாது.! மதுரைக்கு கிழக்கே இருந்து வரக்கூடிய ராமநாதபுரம் மாவட்ட மக்கள்.

  சிந்தாமணி தியேட்டர் ஸ்டாப்பில் இறங்கி நடந்தால் அதிக பட்சம் 10 நிமிடத்தில் நடந்தே இக்கடைக்கு வந்துவிடலாம்.!

  தெற்கு பக்கமுன்னா கிழக்கு கோபுரம் வந்து அம்மன் சன்னிதி தெரு வழியாக நடந்து வந்து இடது புறம் திரும்பினால் இந்தக்கடை.கீழமாசி வீதி வழியானாலும் சரி வெங்கலக்கடை தெரு வழியா வந்தாலும் 5 நிமிட நடை தான்.

  இந்தக் கடையைச் சுற்றியுள்ள அம்மன் சன்னிதி, கீழமாசி வீதி, வெங்கலக்கடை தெரு எல்லாம் ஒரு திருமணத்துக்குத் தேவையான சகல மளிகைச் சாமான்கள் முதல் பட்டு சேலை, சீர் பாத்திரங்கள் பித்தளை பாத்திரங்கள், வரை எல்லாமே வாங்கும் இடம் கால்நடைகளுக்கான தீவனங்கள் சாட்டை, கயிறு, மணி, நாட்டு மருந்துகள், சந்தனம் ஜவ்வாது என எல்லாமும் கிடைக்கும் என்பதால் மதுரை சுற்றுவட்டார கிராம மக்கள் அனைவரும் கூடும் இடம் இது.
  தங்கள் பர்ச்சேஸ் முடித்துவிட்டோ அல்லது ஆரம்பிக்கும் முன்னரோ மக்கள் கூடுமிடமே ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்..! கிராமத்து மக்கள் அதற்கு வைத்த பெயர் சந்துக்கடை! ஆம். அந்த காலத்து மிராசுதார் வீடு குறுகிய சந்தில் 20 அடி நடந்தால் சரெலென விரியும் கூடம்.

  jayavilas

  பழைய மர உத்திரங்கள் இரும்புக் கம்பி ஜன்னல்கள் என பழமை மாறாது ஒரு ஓட்டல் போலவே இருக்காது.. இங்குள்ள அறைகளிலும் முற்றத்திலும் டேபிள் சேர்கள் போட்டு நமக்கு விதவிதமாக பரிமாறுவார்கள்.. அசைவச் சாப்பாடு தான்.! மட்டன், சிக்கன், மீன் குழம்புகள், பொரித்த மீன், சிக்கன் 65, போன்லெஸ் இப்படி எல்லா உணவுகளும் இங்கே தரமாகக் கிடைக்கும்.!
  இந்தியா குடியரசு ஆன 1950இல் ஆரம்பிக்கப் பட்ட கடை இது. இவர்களது பிரத்யேக தயாரிப்பு மற்றும் மசாலாக்கள் மூலம் அவர்கள் உணவின் தனித்தன்மையும் சுவையும் தெரியும்! இங்கு தரும் குடல் குழம்பிற்கு பலர் நாக்குகள் அடிமை.. குடல் சின்னவெங்காயம் தக்காளி கருவேப்பிலை மிளகுத்தூள் போட்ட ஃப்ரையும் ஃபேமஸ்.!

  jayavilas

  ஒரே ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் கூட அதனுடன் இலவசமாக அரை கப் வெள்ளை சாதம் சிக்கன், மீன், மட்டன் குழம்புகள், இரசம் மோர் எனத் தருவது இவர்களது தனிச் சிறப்பு.! இங்கு பொரித்த மீன் எதுவென்றெலாலும் அன்றைய சீசனுக்கு ஏற்றார் போல இருக்கும்.. சுடச்சுட கிடைக்கும் சின்ன வெங்காயம் போட்டு வதக்கிய சுக்கா வருவலும் படு ஃபேமஸ்.!

  jayavilas

  ஆம்லேட் வகைகள் போடுவதில்லை.. ஆனால் அருமையான பொன்னி அரிசி சாதத்துடன் மணக்கும் அசைவக் குழம்புகள் என பரிமாறி அசத்துவார்கள்.. அன் லிமிடெட் சாப்பாடு என்பதாலும் கேட்க கேட்க குழம்புகள் சளைக்காமல் தருவதாலும் கிராம மக்களுக்கு மிகப் பிடித்த கடையாகிப் போனது.. இங்கும் மதிய நேரத்தில் கூட்டம் அலைமோதும் இடம் கிடைப்பது கடினம்.!

  jayavilas

  அந்த சந்து நெடுகிலும் நிற்கும் க்யூவில் போய் நாமும் நிற்க வேண்டும் இருந்தால் என்ன?ஒரு தரமான சுவையான நல்ல அசைவச் சாப்பாட்டிற்கு அரை மணி நேரம் நின்றால் குறைந்தா போயிடும்! நமக்கு இன்னும் அதிகம் பசிக்கும்.. இக்கடையின் உணவும் ருசிக்கும்.! மதுரை பக்கம் வந்தா கீழ ஆவணி மூல வீதி ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்பில் வந்து ருசிக்க மறக்காதிங்க.!