நாகினி நாடகம் ஆடிய நபர் மயங்கி விழுந்து பலி: வைரல் வீடியோ!

  0
  1
  தாகூர்

  மேடையில் உற்சாகமாக நடனம் ஆடி கொண்டிருந்த தாகூர் திடீரென்று எதிர்பாராத விதமாக தரையில்  சுருண்டு விழுந்துள்ளார்.

  மத்தியப்பிரதேசம்: நாகினி நடனம் ஆடிய நபர் திடீரென விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  nagini

  மத்தியப்பிரதேச மாநிலம் சீயோனி என்ற மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டது. பின்பு கடந்த வெள்ளியன்று  நீரில் கரைக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற விழாவின் போது தாகூர் என்ற நபர் நாகினி நடனம் ஆடியுள்ளார். மேடையில் உற்சாகமாக நடனம் ஆடி கொண்டிருந்த தாகூர் திடீரென்று எதிர்பாராத விதமாக தரையில்  சுருண்டு விழுந்துள்ளார்.

   

  மூர்ச்சையாகி கிடந்த அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தாகூர் மயங்கி விழும் விடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.