நஷ்டத்திலிருந்து மீண்ட இண்டிகோ நிறுவனம்…..3 மாசத்துல ரூ.496 கோடி லாபம்

  0
  2
  இண்டிகோ

  விமான சேவையில் ஈடுபட்டு வரும் இண்டிகோ நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.496 கோடி ஈட்டியுள்ளது.

  நாட்டின் முன்னணி தனியார் விமான சேவை நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ. இந்நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் இண்டிகோ நிறுவனமாக ரூ.496 கோடி ஈட்டியுள்ளது. முந்தைய செப்டம்பர் கலாண்டில் இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1,062 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. 2018 டிசம்பர் காலாண்டில் இண்டிகோ நிறுவனம் நிகர லாபமாக ரூ.185.2 கோடி ஈட்டியிருந்தது.

  இண்டிகோ

  கடந்த டிசம்பர் காலாண்டில் (2019 அக்டோபர்- டிசம்பர்) இண்டிகோ நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.10,330.2 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டை காட்டிலும் 25.5 சதவீதம் அதிகமாகும். இண்டிகோ நிறுவனத்தின் மொத்த வருவாயில் பயணிகள் டிக்கெட் விற்பனை வாயிலான ரூ.8,770.3 கோடியும், துணை சேவைகள் வாயிலான வருவாய் ரூ.1,037.3 கோடியும் அடங்கும்.

  இண்டிகோ விமானம்

  இண்டிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோனோஜாய் தத்தா கூறுகையில், புதிதாக 17 உள்நாட்டு வழித்தடங்களிலும், 7 சர்வதேச வழித்தடங்களிலும் விமான சேவைகளை தொடங்கியுள்ளோம். வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் அதேவேளையில் எங்களது வாடிக்கையாளர் சேவை அளவுகளிலும் அதிக கவனம் செலுத்துகிறோம் என தெரிவித்தார்.