நல்ல நேரம் முடிய போகுது; சுயேட்சை வேட்பாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய கார்த்தி சிதம்பரம்!

  0
  9
  கார்த்தி சிதம்பரம் (கோப்புப்படம்)

  நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த கார்த்தி சிதம்பரம் சுயேட்சை வேட்பாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக கூறப்படும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

  சிவகங்கை: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த கார்த்தி சிதம்பரம் சுயேட்சை வேட்பாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக கூறப்படும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான சிவகங்கை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக நீண்ட இழுபறிக்கு பின்னர் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய தனது ஆதரவாளர்களுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

  karti chidambaram

  அப்போது, சுயேட்சை வேட்பாளர் ராஜேந்திரன் என்பவர் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் தனது ஆதரவாளர்களுடன் திடீரென ஆட்சியர் அறைக்குள் நுழைந்த கார்த்தி சிதம்பரம், நல்ல நேரம் முடிந்து விடப் போவதாக கூறி சுயேட்சை வேட்பாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டு தனது வேட்புமனுவை தாக்கல் செய்ததாகவும், அதன் பின்னரே சுயேட்சை வேட்பாளர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

  karti chidambaram

  இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

  முன்னதாக, சுயேட்சை வேட்பாளருக்கு கைகுலுக்கி கார்த்தி சிதம்பரம் வாழ்த்து கூறியதாக கூறப்பட்ட நிலையில், அவரை கார்த்தி வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  இதையும் வாசிங்க

  என் மகளுக்கு நேர்ந்தது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது; போலீஸ் கான்ஸ்டபிள் கதறல்!