நரேந்திர மோடி பயோபிக்கில் நடிக்கும் அஜித் பட வில்லன்!

  0
  1
  narendramodi

  பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் அவரது கேரக்டரில் பாலிவுட் நடிகை விவேக் ஓபராய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் அவரது கேரக்டரில் பாலிவுட் நடிகை விவேக் ஓபராய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை இந்திய சினிமாவில் சமீபகாலமாக புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாவது வழக்கமாக உள்ளது. பயோபிக் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு கிடைப்பதாலும், உண்மை சம்பவத்தை கொண்டு திரைப்படம் எடுப்பது சவாலாக இருப்பதாலும் ஃபிலிம் மேக்கர்கள் பலரும் அதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  manmohansingh

  தற்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுகால ஆட்சி காலத்தை மையப்படுத்தி அனுபம் கேர் நடிப்பில் ‘தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகவிருக்கும் அப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  vivekoberoi

  இந்நிலையில், தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் உருவாகவுள்ளது. ‘மேரி கோம்’ பயோபிக் படத்தை இயக்கிய ஓமங் குமார் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். சந்தீப் சிங் தயாரிக்கும் இப்படத்தில் நரேந்திர மோடியாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இப்படத்தின் பணிகள் வரும் ஜன.7ம் தேதி பூஜையுடன் தொடங்கவுள்ளது. அன்றே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவேக் ஓபராய் நடிப்பில் கடைசியாக பாலிவுட்டில் ‘பேங்க் சோர்’ திரைப்படமும், தமிழில் அஜித் நடித்த ‘விவேகம்’ திரைப்படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

  vivekoberoi