நம்ம வீட்டுப் பிள்ளை: அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்த அடுத்த பாடல் ரெடி..  

  0
  3
  vijyaka

  சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்திலிருந்து எங்க அண்ணன் பாடல் வெளியாகியுள்ளது. 

  மிஸ்டர் லோக்கல் படத்திற்குப் பிறகு பாண்டி ராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்து வருகிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். 

  சமீபத்தில் ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்று  தலைப்பு வைக்கப்பட்டுள்ள போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.  மேலும் இதில் பாரதிராஜா, யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என்று பல முன்னணி நடிகர்கள் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

  இந்த நிலையில் இதில் இடம் பெற்றுள்ள முதல் பாடலை தற்போது சன் பிக்சர்ஸ் குழுவினர் வெளியிட்டுள்ளனர். சிவகார்த்திகேயன் – ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் ‘எங்க அண்ணன்’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஏற்கனவே அண்ணன் தங்கை பாசத்தை  வெளிப்படுத்தும் வகையில் பல பாடல்கள் உள்ள நிலையில் தற்போது புதிதாக இந்த பாடலும் அதோடு இணைந்துள்ளது.