’நட்புன்னா என்னன்னு தெரியுமா’…ஹிட் பட லிஸ்டுல வந்தாச்சும்மா…

  0
  6
  நட்புன்னா என்னன்னு தெரியுமா

  மிக மிக எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ படு ஊத்தல் படமாக ஆகியுள்ள நிலையில் அதனுடன் மோதிய எஸ்.ஜே.சூர்யாவின் ’மான்ஸ்டர்’, ரம்யா நம்பிசனுடன் புது முகங்கள் நடித்த ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ ஆகிய இரு படங்களும் சர்ப்ரைஸ் ஹிட்டாக மாறியுள்ளன.

  natpuna ennanu theriyuma

  சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் ஃப்ளாப்பை படம் ரிலீஸாகியுள்ள இரண்டாவது நாளே அவரது ரசிகர் வட்டாரங்களே ஒத்துக்கொண்டுள்ள நிலையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களில் சிலர் அதன் தோல்வியைப் பார்ட்டி வைத்துக்கொண்டாடுவதை அனைத்து ஊடகங்களும் மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றன. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஸ்மைலியைப் போட்டு காலையில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட அருண் விஜய் ரசிகர்களின் எதிர்ப்பால் அது வேறு ஒரு அர்த்தத்தில் போடப்பட்டது என்று மழுப்பினார்.

  natpuna ennanu theriyuma

  இந்நிலையில் சிறுபடமாக ரிலீஸாகிய ‘நட்புன்னா எ. தெ’ விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டோடு காட்சிகளும் அதிகரிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. தரமான, இயல்பான நகைச்சுவையும், ரம்யா நம்பிசனின் லவ்லி பர்ஃபாமென்சும் இப்படத்திற்கு முக்கிய ப்ளஸ் பாயிண்டுகளாக மாறியுள்ளன. ஆடம்பரமாக செலவழிக்கப்படாத, நடிகர்களின் சாக்கு மூட்டையில் பணத்தைக் கொண்டு போய்க்கொட்டாத படங்களின் வெற்றியே சினிமா மேலும் ஆரோக்கியமாக வழிவகுக்கும் என்கிற வகையில் இப்படத்தின் வெற்றி தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடப்படவேண்டிய ஒன்றுதான்.