நடுவீட்டுக்குள் புகுந்த எதிரி… ஷாக்கான விஜயகாந்த்.. சமாளித்த பிரேமலதா..!

  0
  7
  விஜயகாந்த்

  இருந்தாலும் எதிர்ப்பு தெரிவித்தவர்களை செல்லமாக கடிந்து கொண்ட தேமுதிக தலைமை, உள்ளாட்சி தேர்தல் வரை அடக்கி வாசிக்க சொல்லி இருக்கிறார்களாம்.

  விஜயகாந்த் பாஜகவுடன் நல்ல நெருக்கம் பாராட்டி வருகிறார். மாநில அளவில் விஜயகாந்தை விட அவரது மனைவி பிரேமலதா அதிமுகவுக்கு பக்க பலமாக இருந்து வருகிறார்.

  vijayakanth

  எல்லாம் உள்ளாட்சி தேர்தலுக்காக நடக்கும் வேலைகள். ஆனால் விஷயம் அதுவல்ல.  கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்த விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்டு அதிமுகவிடம்  தோற்றார். உளுந்தூர்பேட்டையில் ஜெயித்த குமரகுரு தனது மகளின் திருமணத்துக்காக அதிமுக  முக்கிய தலைகளுக்கு பத்திரிகை வைத்து அழைத்துள்ளார்.

  edappadi

  கூட்டணி என்ற முறையில் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்தை பார்த்தாராம். அழைப்பிதழ் கொடுத்துள்ளார். அப்போது ’இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’ என கட்சி தலைவர் கேட்க, அவரது மனைவி பிரேமலதா, ‘உங்களை உளுந்தூர்பேட்டையில் தோற்கடித்த அதிமுகவை சேர்ந்தவர்’ என்று முழு விளக்கமும் கொடுத்தாராம். 

  vijayakanth
  இந்த தகவல் வேகமாக பரவ, ’நம்ம தலைவரை தோற்டித்த உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ மகள் திருமணத்துக்கு தலைவர் வரக்கூடாது’ என்று கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இருந்தாலும் எதிர்ப்பு தெரிவித்தவர்களை செல்லமாக கடிந்து கொண்ட தேமுதிக தலைமை, உள்ளாட்சி தேர்தல் வரை அடக்கி வாசிக்க சொல்லி இருக்கிறார்களாம்.