நடுவானில் திக் திக்…. பெரும் விபத்தில் இருந்து தப்பிய இண்டிகோ விமானம்

    0
    6
    Flight

    சென்னை வந்த இண்டிகோ விமானம், அதே நிறுவனத்தின் மற்றொரு விமானத்துடன் நடுவானில் மோதவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    சென்னை: சென்னை வந்த இண்டிகோ விமானம், அதே நிறுவனத்தின் மற்றொரு விமானத்துடன் நடுவானில் மோதவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    கவுகாத்தியில் இருந்து சென்னை நோக்கி இண்டிகோ விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதேபோன்று கவுகாத்தியில் இருந்து கொல்கத்தா நோக்கி மற்றொரு இண்டிகோ விமானமும் வங்கதேச வான் எல்லையில் பறந்து கொண்டிருந்தது. 

    அப்போது வங்கதேச வான்போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த உத்தரவை அடுத்து கொல்கத்தா விமானம் 35 ஆயிரம் அடியில் பறக்க தொடங்கியது.  இதனால் இரு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று மோதும் சூழ்நிலை ஏற்பட்டது.

    இதனை கவனித்த கொல்கத்தா வான்போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் உடனடியாக சென்னையில் இருந்து சென்ற விமானம் வலதுபுறம் திரும்பி செல்ல உத்தரவிட்டார். இதன்காரணமாக இரண்டு விமானங்கள் மோதிக்கொள்ளும் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இரண்டு விமானங்கள் மோதிக்கொள்ள 45 விநாடிகளே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.