நடுவரிடம் ஆக்ரோஷமாக முறையிட்ட கோலி! அணியை விட்டுக்கொடுக்காத கேப்டன்

  0
  1
   விராட் கோலி

  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானுக்கு எதிரான இன்றைய போட்டியில் நடுவரிடம் விராட் கோலி விக்கெட் கேட்டு முறையிட்டது வைரலாகி உள்ளது.

  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானுக்கு எதிரான இன்றைய போட்டியில் நடுவரிடம் விராட் கோலி விக்கெட் கேட்டு கெஞ்சுவது போன்ற முக பாவனையுடன் பேசிய வீடியோ வைரலாகிவருகிறது.

  இந்தியா – ஆப்கான் அணிக்கு இடையிலான போட்டி சவுதம்டன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 67 ரன்கள் அடித்தார். இதையடுத்து 225 ரன்கள் என்ற இலக்குடன் ஆப்கான் விளையாடி வருகிறது. இதில், மூன்றாவது ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை ஸஸாய் எதிர் கொண்டார். ஷமி வீசிய பந்து அவரது பேடில் பட்டது. அனைவரும் அவுட் என கத்தினர். 

  ஆனால், நடுவர் அவுட் கொடுக்கவில்லை. உடனே, கேப்டன் விராட் கோலி ரிவிவ்யூ கேட்டார். முதலில் பந்து பேட்டில் படாமல் பேடில் மட்டும் பட்டு சென்றது உறுதியானது. ஆனால் பந்து வெளியே சென்றுவிட்டதாக் விக்கெட் இல்லை என நடுவர் சொல்லிவிட்டார். இதைக்கேட்டு பொங்கி எழுந்த கோலி தந்து கேப்டன் பதவியை கையிலெடுத்தார். இது அவுட் தான் என நடுவரிடம் ஆக்ரோஷமாக வாதிட்டார். தனது அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அவர், நடுவரிடம் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.