நடுவரிடம் ஆக்ரோஷமாக சண்டையிட்ட கோலிக்கு அபராதம்- ஐசிசி 

  0
  2
  Virat Kohli

  ஆப்கானிஸ்தான் உடனான போட்டியில் விதிகளை மீறி நடுவரிடம் நடந்து கொண்டதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு போட்டி ஊதியத்தில் 25% அபராதத்தை ஐசிசி விதித்துள்ளது. 

  ஆப்கானிஸ்தான் உடனான போட்டியில் விதிகளை மீறி நடுவரிடம் நடந்து கொண்டதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு போட்டி ஊதியத்தில் 25% அபராதத்தை ஐசிசி விதித்துள்ளது. 

  இந்தியா – ஆப்கான் அணிக்கு இடையிலான போட்டி நேற்று சவுதம்டன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 67 ரன்கள் அடித்தார். இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு 225 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. 

  இந்தியா- ஆப்கான் போட்டியின் போது மூன்றாவது ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை ஸஸாய் எதிர் கொண்டார். ஷமி வீசிய பந்து அவரது பேட்டில் பட்டது. அனைவரும் அவுட் என கத்தினர். ஆனால், நடுவர் அவுட் கொடுக்கவில்லை. உடனே, கேப்டன் விராட் கோலி ரிவிவ்யூ கேட்டார். முதலில் பந்து பேட்டில் படாமல் பேட்டில் மட்டும் பட்டு சென்றது உறுதியானது. ஆனால் பந்து வெளியே சென்றுவிட்டதாகவும் அதனால் விக்கெட் இல்லை என நடுவர் சொல்லிவிட்டார். இதைக்கேட்டு பொங்கி எழுந்த கோலி தந்து கேப்டன் பதவியை கையிலெடுத்தார். இது அவுட் தான் என நடுவரிடம் ஆக்ரோஷமாக வாதிட்டார். தனது அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அவர், நடுவரிடம் கோலி பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. 

  இந்நிலையில் நேற்றைய போட்டியில் விதிகளை மீறி நடுவரிடம் நடந்து கொண்டதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு போட்டி ஊதியத்தில் 25% அபராதத்தை ஐசிசி விதித்துள்ளது.