நடுங்க வைக்கும் கொரோனா: ஸ்பெயினில் ஒரே நாளில் 913 பேர் பலி!

    0
    3
    கொரோனா

    கோயில்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்களை  வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி மூடவைக்கக்கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  

     கொரோனா வைரஸ் தற்போது  199  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதுவரை உலகம் முழுவதும் 7லட்சத்து 84ஆயிரத்து 716  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    tn

    இதனால்  பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.  பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் கோயில்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்களை  வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி மூடவைக்கக்கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  

    tn

    இந்நிலையில், ஸ்பெயினில் ஒரே நாளில் 913 பேர் உயிரிழந்ததால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7,716 ஆக அதிகரித்துள்ளது. மேலும்  உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியது.  இதுவரை 37,639  பேர் பலியாகி  உள்ளனர் .