நடிகை ரஞ்சிதா மீது கணவர் பரபரப்பு புகார்: அதிர்ச்சியில் திரையுலகம்!?

  0
  6
  நடிகை ரஞ்சிதா கவுர்

  பாலிவுட் நடிகை ரஞ்சிதா கவுர் மீது அவரது கணவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

  புனே: பாலிவுட் நடிகை ரஞ்சிதா கவுர் மீது அவரது கணவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

  பழம்பெரும் பாலிவுட்  நடிகை ரஞ்சிதா கவுர். இவர் லைலா மஜ்னு, அன்கியோன் கே ஜாராகோன் சே உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். இவரது கணவர் ராஜ் மசாந்த். இவர்களுக்கு  ஸ்கை என்ற மகனும் உள்ளார். நடிகை ரஞ்சிதா தற்போது புனேவில் வசித்து வருகிறார்.

  ranjitaa

  இந்நிலையில் நடிகை ரஞ்சிதாவின் கணவர் ராஜ் மசாந்த்  புனே கோரேகாவ் பார்க் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், சொத்து பிரச்னை காரணமாக மனைவி ரஞ்சிதாவும் மகன் ஸ்கையும் சேர்ந்து கொண்டு தன்னை அடித்து கொடுமைப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.புகாரின் அடிப்படையில் நடிகை ரஞ்சிதா கவுர் மற்றும் மகன்  ஸ்கை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

  ranjitaa

  இதுபற்றி ராஜ் கூறியுள்ள மசாந்த், ‘ நான் வெளிநாட்டில் வாழ்ந்து வந்தேன். தற்போது அமைதியாக வாழலாம் என்று நினைத்து சில மாதங்களுக்கு முன்பு புனே வந்தேன். ஆனால் என் மனைவியும், மகனும் சொத்து பிரச்னையில் என்னை அடித்துத் துன்புறுத்துகின்றனர். முக்கியமாக என் மகன், கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அடிக்க வருகிறான். ஆனால் என் மனைவி இது பற்றி எதுவும் கூறாமல் அமைதியாக நின்று வேடிக்கை பார்க்கிறாள்’ என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.