நடிகை பார்வதியால் மல்லுவுட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்!

  0
  23
  உயரே

  நடிகை பார்வதி நடிப்பில் வெளியாகியுள்ள உயரே திரைப்படம் தென் கொரியாவில் வெளியாகியுள்ளது. 

  நடிகை பார்வதி நடிப்பில் வெளியாகியுள்ள உயரே திரைப்படம் தென் கொரியாவில் வெளியாகியுள்ளது. 

  uyare

  மனு அசோகன் இயக்கத்தில் பார்வதி நாயர், டோவினோ தாமஸ், ஆஷிப் அலி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘உயரே’. இதில் பார்வதி ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ளார். சுதந்திரத்திற்குத் தடையாக இருக்கும் காதலனை பிரியும் பெண் மீது ஆசிட் வீச, விமானியாக வேண்டும் என்ற அவளின்  கனவை அவள் எப்படி எட்டி பிடிக்கிறாள் என்பதே இப்படத்தின் கரு. இப்படத்திற்கு  பாபி-சஞ்சய் திரைக்கதை அமைக்க, கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். கடந்த மாதம்  வெளியான இந்த திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக  நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

  parvathy

  இந்நிலையில் இப்படம் கடந்த 19 ஆம் தேதி தென் கொரியாவில் வெளியானது. இதன் மூலம் கிழக்கு ஆசிய நாடுகளில் வெளியான  முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமை உயரே பெற்றுள்ளது. பொதுவாக இந்திய  படங்களுக்குத் தென் கொரியாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. அதன்படி அங்கு வெளியான மை  நேம் இஸ்  கான் மற்றும் த்ரி இடியட்ஸ் போன்ற படங்கள் வசூலை வரி குவித்தது. மேலும் கொரியாவில் வெளியான முதல் தமிழ் திரைப்படமாக எந்திரன் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

   

  முன்னதாக உயரே திரைப்படம் கேரளாவின் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.