நடிகை தமன்னாவுக்கு டாக்டர் பட்டம்: ‘காசு கொடுத்தா கொடுப்பாங்களா?’ என்று நெட்டிசன்கள் கிண்டல்!

  0
  1
  தமன்னா

  ‘த நவம்பர் ஸ்டோரி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த  வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டல் களத்தில் களமிறங்குகிறார்.

  நடிகர்கள் அஜித் , சூர்யா, விஜய், விக்ரம், எனப் பல முன்னணி  நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டின் கனவு நாயகியாக வலம்வந்தவர்  நடிகை தமன்னா. இவர் விஷாலுடன் இணைந்து  நடித்திருந்த  ஆக்ஷன் திரைப்படம்  சமீபத்தில் வெளியானது. தற்போது நடிகை தமன்னா  ‘த நவம்பர் ஸ்டோரி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த  வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டல் களத்தில் களமிறங்குகிறார்.

  ttn

  இந்நிலையில் திரையுலகில் சிறந்த பங்காற்றிவரும் நடிகை தமன்னாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் KEISIE சர்வதேச பல்கலைக்கழகத்துடன் இணைந்து, CIAC இந்த பட்டத்தை  வழங்கி கௌரவித்துள்ளது. இதன் மூலம் தென் கொரியாவின் KEISIE சர்வதேச பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் பெறும் முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமையும் இந்திய சினிமாவின் இந்த விருதை பெரும் 7வது  நடிகை என்ற கௌரவமும் தமன்னாவுக்கு கிடைத்துள்ளது.

  இருப்பினும் இதை பார்த்த நெட்டிசன்கள் சிலரோ, காசு கொடுத்தா கொடுப்பாங்க தானே இதெல்லாம் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.