நடிகையாக வேண்டும் என்று வீட்டை விட்டு ஓடிவந்த பள்ளி மாணவிகள்! காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்

  0
  5
  representative image

  சோனு யாதவ், ​​என்ற ஆட்டோ ஓட்டுனரிடம் சவாரிக்காக வந்த இரு பதின்பருவ பெண்கள், தங்களை அந்தேரியின் லோகண்ட்வாலாவில் உள்ள பாலாஜி டெலிஃபில்ம்ஸுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது அங்கு எந்த வித ஆடிசனும் நடக்கவில்லை என்று தெரிய வந்தது.

  சோனு யாதவ், ​​என்ற ஆட்டோ ஓட்டுனரிடம் சவாரிக்காக வந்த இரு பதின்பருவ பெண்கள், தங்களை அந்தேரியின் லோகண்ட்வாலாவில் உள்ள பாலாஜி டெலிஃபில்ம்ஸுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது அங்கு எந்த வித ஆடிசனும் நடக்கவில்லை என்று தெரிய வந்தது. இதானால் அந்த சிறுமிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். எனவே சோனு அவர்களை ப்ரொடக்ஷன் நிறுவனத்தில் யாரையாவது அழைக்குமாறு அறிவுறுத்தினார்.

  school-girls-running

  “அந்த சிறுமிகளை என் வீட்டிற்கு அழைத்துச் சென்று, பின் ஆடிஷன் தொடங்கியதும் அவர்களை ஸ்டுடியோவில் கொண்டு வந்து விடலாம்” என்று நினைத்தேன். பின்னர், “இதில் ஏதோ தவறு இருப்பதாக நான் உணர்ந்தேன். இருவரிடமும் மொபைல் போன்கள் இல்லை. அவர்கள் எனது மொபைலில் இருந்து கால் செய்தார்கள், ஆனால் அவர்களுக்கு எந்த பதில் கிடைக்கவில்லை. எனவே நான் உண்மையை கூறும்படி கடுமையாக கேட்டேன், இல்லையென்றால் இருவரையும் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும்” என்றதாக சோனு கூறினார்.

  உடனே அந்த சிறுமிகள் அழத் தொடங்கினர், என்ன நடந்தது என்று சோனுவிடம் சொன்னார்கள். பெங்களூரு ஆர்.டி.நகரின் கனகாநகரில் உள்ள லிட்டில் ஏஞ்சல்ஸ் பப்ளிக் பள்ளியில், அவர்கள் ஒன்பதாம் வகுப்பு படிப்பதாகக் கூறினர். நடிகையாக வேண்டும் என்ற ஆசையில்  பிப்ரவரி 11 அன்று தங்கள் வீடுகளை விட்டு ஓடிவந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

  girl in-train

  அவர்கள் லோக்மண்ய திலக் எக்ஸ்பிரஸில் மும்பைக்கு டிக்கெட் இல்லாமல் ஏறியுள்ளனர். அவர்களிடம் வெறும் ரூ .840 மட்டுமே இருந்தது, செல்போனும் இல்லை. சிறுமிகள் காணாமல் போதை அறிந்து அவர்களின் பெற்றோர்கள் பதறிப்போயினர். சிசிடிவி காட்சிகளை பார்க்கும் போது இருவரும் சுவர் ஏறிகுதித்து சென்றது தெரியவந்தது.

  சோனு யாதவ் அவர்களை மீண்டும் குலா எல்.டி.டி.க்கு அழைத்துச் சென்று, சாப்பாடு மற்றும் திரும்பி செல்லுவதற்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளார். “நான் பயணத்திற்கு கட்டணம் வசூலிக்கவில்லை, ஏனென்றால் நான் அவர்களுக்கு எதோ ஆபத்து நடக்கப்போவதாக உணர்ந்தேன், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக, சி.சி.டி.வி.களைக் கொண்ட ஆட்டோ ஸ்டாண்ட் அலுவலகத்திற்குள் அமர வைத்தேன்” என்று சோனு கூறினார்.