நடிகர் வடிவேலு ஸ்டைலில் சம்பளத்தை உயர்த்திய யோகி பாபு

  0
  4
  actor vadivelu

  நகைச்சுவை நடிகர் வடிவேலு ஸ்டைலில் யோகி பாபு தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலு ஸ்டைலில் யோகி பாபு தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  மிக நீண்ட இடவேளைக்குப் பிறகு நடிகர் விவேக் விஜயுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்க, முன்பாதியில் யோகிபாபு நடிக்கிறார். 

  யோகிபாபுவின் சம்பளம் கோடியில் ஏறியிருக்கிறது என்ற தகவல் பரவியிருந்தது. ஆனால் அவருக்கு நாள் கணக்கில் சில லட்சங்கள் என்கிற பெயரில்தான் ஒப்பந்தம் செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது. யோகிபாபுவும் இப்படி வாங்குவதைதான் விரும்புவதாக கூறப்படுகிறது. இது அப்படியே வடிவேலு ஸ்டைல் என்பது மட்டும் நிச்சயம். 

  ஒரு படத்திற்கு இரண்டு கோடி சம்பளம் என்றால் படம் முடியும் வரைக்கும் ஒத்துழைப்போடு  இருக்க வேண்டும் ஆனால் நாள் கணக்கின்படி ஒரு நாளைக்கு பத்து லட்சம் என்றால் பத்து நாளைக்கு ஒரு கோடி வரும். மீதமுள்ள தேதிகளை இன்னொரு படத்திர்கு கொடுத்து மாதத்தில் முப்பது நாளில் ஒரு படத்தில் சம்பளத்தில் சம்பாதிப்பதை விட அதிகமாக சம்பாதிப்பதுதான் ட்ரிக். ஆனால் இப்படியே போனால் கூட பரவாயில்லை. 

  ஒரே படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டு மதியம் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவது. அந்த நாளை ஓபி அடித்து விட்டு பத்து நாளை இருபது நாளாக்கி ஒரே படத்தில் அடிப்பதுதான் வடிவேலு ஸ்டைல் இதில் யோகிபாபு எந்த வழியை பின்பற்றப்போகிறார் என்பது தெரியவில்லை.