நடிகர் வடிவேலு பாணியில் கடைகளில் கொள்ளை! விழிபிதுங்கும் போலீசார்!

  0
  1
  கொள்ளை

  தமிழகத்தில் சிரிப்பு, கோபம், இயலாமை என்று அத்தனை விதமான முகபாவங்களுக்கும் மீம்ஸ் கிரியேட்டர்கள் வடிவேலு நடித்த படத்தின் காட்சிகளை பயன்படுத்தி வருகிறார்கள்.  இருட்டு அறையின் சிம்மாசனத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு, நடிக்க வரமாட்டேன் என்று வடிவேலு வீம்பு பிடித்து திரிஞ்சாலும், அவரை அத்தனை சீக்கிரத்தில் ரசிகர்கள் விடுவதாயில்லை.

  தமிழகத்தில் சிரிப்பு, கோபம், இயலாமை என்று அத்தனை விதமான முகபாவங்களுக்கும் மீம்ஸ் கிரியேட்டர்கள் வடிவேலு நடித்த படத்தின் காட்சிகளை பயன்படுத்தி வருகிறார்கள்.  இருட்டு அறையின் சிம்மாசனத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு, நடிக்க வரமாட்டேன் என்று வடிவேலு வீம்பு பிடித்து திரிஞ்சாலும், அவரை அத்தனை சீக்கிரத்தில் ரசிகர்கள் விடுவதாயில்லை. ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் நூதன முறையில் திருடுபவர்களுக்கும் வடிவேலு வழிகாட்டியாய் இருக்கிறார்.
  ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி அரிசிக் கடைக்காரர்களின் கவனத்தை திசைத்திருப்புவது போல நடிகர் வடிவேலு நடித்த படத்தின் காட்சியைப் போல, சென்னையில் பேக் வாங்க வேண்டும் என கூறி

  bag

  சென்னை அடையாறில் இருக்கும் கியூ பேக்ஸ் கடைக்குச் சென்றிருக்கிறார் வாடிக்கையாளர் ஒருவர். கடை உரிமையாளர் கமலக்கண்ணன் அப்போது கடையில் இருந்திருக்கிறார். கடைக்குச் சென்ற இளைஞர், ‘பள்ளி மாணவர்களுக்குத் தருவதற்காக  நிறைய பேக்குகள் தேவைப்படுவதாகச் சொல்லி, கமலக்கண்ணனிடம் ஒவ்வொரு பேக்குகளாக எடுத்துக் காட்டச் சொல்லியிருக்கிறார். கடை உரிமையாளர் காட்டிய பேக்குகளில் இருந்து தேர்ந்தெடுத்து சுமார் 8 ஆயிரம் ரூபாய்க்கு பேக் வாங்கிய அந்த நபர் இந்த பைகளை எல்லாம் எடுத்துச் செல்வதற்கு ஆட்களை அழைத்து வருவதாக சொல்லி அந்த இடத்தை காலி செய்திருக்கிறார்.

  bag

  சினிமாவில் வருவதைப் போலவே இன்று காலையிலேயே நரி முகத்துல முழிச்சிருக்கோம். 8 ஆயிரம் ரூபாய்க்கு வியாபாரம் ஆகியிருக்கு என்று உற்சாகத்தில் இருந்த கடை உரிமையாளருக்கு நேரம் செல்ல செல்ல பொறி தட்டியிருக்கிறது. சந்தேகத்தில் மீண்டும் பைகளை எல்லாம் ஆராய்ந்து பார்த்ததில் அத்தனை பைகளும் பத்திரமாக இருந்திருக்கிறது. நீண்டநேரமாக ஆட்களை அழைத்து வருவதாக சென்ற இளைஞர் திரும்ப வராததால், மீண்டும் சந்தேகமடைந்த கமலக்கண்ணன் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, பேக்குகளை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்,  கல்லாப் பெட்டிக்குள் இருந்து பணத்தை திருடிச் சென்றது கேமிராவில் பதிவாகியிருந்தது. 
  இது குறித்து அடையாறு போலீசாரிடம் புகார் தெரிவித்த போது, மற்றொரு கடையிலும் இதே போன்று அந்த இளைஞர் மோசடியில் ஈடுபட்டு தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது. சிசிடிவி வீடியோவை வைத்துக் கொண்டு இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.