நடிகர் யோகி பாபுவின் புதிய அவதாரம் என்ன தெரியுமா? 

  0
  3
  yogi

  தான் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார் நடிகர்  யோகிபாபு.

  சென்னை: தான் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார் நடிகர் யோகிபாபு.

  தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் தற்போது ஜினியின் ‘தர்பார்’, ‘விஜய்யின் ‘தளபதி 63’ உள்பட பல 18 படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி காமெடி ஜானரில் உருவாகும் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

  yogi babu

  இவர் நடிப்பில் உருவாகியுள்ள தர்மபிரபு படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும்  வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து தற்போது இவர் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்தில் அவரே கதை, கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். 

  yogi babu

  இன்னும் பெயரிடாத இப்படத்தை இயக்குநர் ராஜேஷ் உதவியாளர் ராஜசேகர் இயக்கவுள்ளார். ஏற்கனவே யோகிபாபு லொள்ளுசபாவிற்கு காமெடி ஸ்க்ரிப்ட் எழுதிய அனுபவம் உள்ளவர் என்பதால் அவரது ஸ்க்ரிப்டில் உருவாகும் காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.