நடிகர் பரத் நடிக்கும் வெப் சீரிசில் பிரியா பவானி சங்கர்?

  0
  2
  priya bhavani

  நடிகர் பரத் நடிக்கும் வெப் சீரிசில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  சென்னை: நடிகர் பரத் நடிக்கும் வெப் சீரிசில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  சின்னதிரை செய்தி வாசிப்பாளராக இருந்து வெள்ளி திரைக்கு உயர்ந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். PBS என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர், மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களின் கதாநாயகியாக நடித்துள்ளார். இரண்டே படங்கள் தான் நடித்துள்ளார் என்றாலும், பிரியாவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

  இந்நிலையில், அமேசான் பிரைம் ஒரிஜினலில், நடிகர் பரத் நடிப்பில் வெளியாக இருக்கும் வெப் சீரிசில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  மேலும், தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து மான்ஸ்டர் திரைப்படத்தில் பிரியா நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.