நடிகர் ஜெயம் ரவி 25 வது படத்தின் தலைப்பு அறிவிப்பு!

  0
  1
  ஜெயம் ரவி

  அவர் நடிப்பில் வெளியான மூன்று படங்களும் ஹிட் அடித்ததால் ஹாட்ரிக் வெற்றியைக் கொண்டாடினார். 

  சென்னை:  நடிகர் ஜெயம் ரவியின் 25வது படத்திற்கு பூமி என்று பெயரிடப்பட்டுள்ளது. 

  தனி ஒருவன் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி நடிக்கும் படங்கள் அனைத்துமே ஹிட் அடித்து வருகின்றன. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதையொட்டி தொடர்ச்சியாக அவர் நடிப்பில் வெளியான மூன்று படங்களும் ஹிட் அடித்ததால் ஹாட்ரிக் வெற்றியைக் கொண்டாடினார். 

  jayamravi

  தற்போது நடிகர் ஜெயம் ரவியின் 25 ஆவது படத்தை  ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் படங்களை இயக்கிய லக்‌ஷமன்  இயக்கி வருகிறார். இதில் பாலிவுட் நடிகை நித்தி அகர்வால் கதாநாயகியாக நடிக்க அவருடன் இணைந்து  தம்பி ராமையா, ராதாரவி, சதீஷ், சரண்யா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஜெயம் ரவியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, டி. இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். 

   

  இந்நிலையில் இப்படத்துக்கு  ‘பூமி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். விவசாயத்தை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம் என்பதால் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.