’நக்கீரன்’ கோபாலுக்கு முதுகெலும்பு என்று ஒன்று இருக்கிறதா?- நெற்றிக்கண்ணைத் திறக்கும் சின்மயி…

  0
  4
  ராய் லட்சுமி

  2060-ல் பாடகி சின்மயிக்கு 70 வயது ஆகும்போது அவருக்கும் வைரமுத்துவுக்குமான ‘மி டு’ பஞ்சாயத்து சூடாக வலைதளங்களில் அலசப்படுமோ என்று ஐயம் கொள்கிற அளவுக்கு அந்த டாபிக்கை சின்மயியும் அவரைச் சார்ந்தவர்களும் சூடு குறையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். அங்ஙணம் தற்போது பாடகியின் நெற்றிக்கண்ணைத் திறக்கவைத்திருப்பவர் அண்ணன் நக்கீரன் கோபால்.

  சமீபத்தில் வெளியாகியிருக்கிற அவரது தரமான சினிமா பத்திரிகையின் உள் அட்டையில் கிளுகிளுப்பான ஒரு நங்கை ஈரப்புடவையுடன் குப்புறப்படுத்தபடி  கோரமாக ஒரு போஸ் கொடுத்துக்கொண்டிருக்க, அதற்கு குறிப்பாக…நீதி மேட்டர்ல வெடைக்குது சின்மயிங்குற பார்ட்டி…பொள்ளாச்சி மேட்டர் வந்தப்ப இப்பிடி எங்க குப்புற விழுந்துகிடந்துச்சோ’…என்று படு ஆபாசமாகப் போட்டிருக்கிறார்கள்.

  சும்மாவே எதற்கெடுத்தாலும் காலில் சலங்கை கட்டி ஆடும் சின்மயி இதைப்படித்து ட்விட் போடாவிட்டால் எப்படி? அந்த உள் அட்டைப் படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு,.. ‘நக்கீரன்’ கோபாலுக்கு தொடர்ந்து என் மீது அப்படி என்னதான் உறுத்தலோ…அவர் ஏன் இவ்வளவு அறுவெறுப்பாக நடந்துகொள்கிறார்? வைரமுத்துவுக்கு நெருங்கிய நண்பர் என்பதால் இப்படி நடந்துகொள்கிறார் என்றால்…வைரமுத்துவின் அத்தனை சமாச்சாரங்களும் அவருக்குத் தெரிந்திருக்கவேண்டும் தானே? வைரமுத்துவைக் கேள்வி கேட்க நக்கீரன் கோபால் உட்பட முதுகெலும்புள்ள ஒருவர் கூடவா தமிழ்நாட்டில் இல்லை? என்று அப்பதிவைத் துவக்கி வைத்திருக்கிறார் சின்மயி.

  பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களின்போது நரம்புகள் புடைக்க கோபால் குரல் எழுப்பியபோதே அவரது இந்த ‘சினிக்கூத்து’ இதழின் செக்ஸ் அவதாரம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இப்போது அதே சமாச்சாரத்தை சின்மயி கையில் எடுத்து அசிங்கப்படுத்தியிருப்பது அண்ணாச்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தப்போவது நிச்சயம்.