நகையை திருடிவிட்டு நாடகம் ஆடிய மனைவி.. மனமுடைந்த கணவன் தற்கொலை!

  0
  1
  dead

  கடந்த 3 ஆம் தேதி 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

  தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரில் வசித்து வந்த துறைமுக ஊழியர் வின்சென்ட்  வீட்டில் கடந்த 3 ஆம் தேதி 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், வின்சென்ட்டின் மனைவி ஜான்சி தான் அந்த நகைகளை கொள்ளையடித்து நாடகம் ஆடியது தெரிய வந்தது. தான் நகையை திருடியதாக வின்சென்ட்டின் மனைவி ஜான்சி ஒப்புக்கொண்டதால், அவரை போலீசார் கைது செய்தனர். 

  ttn

  ஆனால் கைது செய்யப்பட்ட அன்றே ஜான்சி ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் இதனால் மனமுடைந்த வின்சென்ட் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா குறித்து தாளமுத்து நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.