நகைச்சுவை நடிகர் விவேக்கின்  தாயார் காலமானார்!

  0
  5
  விவேக்

  நடிகர் விவேக்கின் தயார் மணியம்மாள் (வயது 86) இன்று தற்போது மாரடைப்பால் காலமானார்.

  சென்னை: நடிகர் விவேக்கின் தயார் மணியம்மாள் (வயது 86) இன்று தற்போது மாரடைப்பால் காலமானார்.

  நகைச்சுவை நடிகரும், சமூக சேவகருமான பத்மஸ்ரீ விவேக் தனது தாயாருடன் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்துள்ளார். 86 வயதான விவேக்கின் தாயார் மணியம்மாள் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
   

  vivek

  அவரின் உடல் சாலிகிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிறகு இரவு அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை காலை 10.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

  நடிகர் விவேக்கின் தாயார் மறைவுக்கு அவரது திரையுலக நண்பர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.