“தோனியே இன்னும் ரிட்டயர்டு ஆவல.. என் புருஷன் எதுக்கு ஆகனும்” – கொந்தளிக்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி

  0
  3
  சர்பராஸ் அகமது

  பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் அகமதுவின் மனைவி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த விதம், இந்திய ரசிகர்களிடம் பெரும் ஆத்திரத்தை கிளம்பியுள்ளது.

  டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்துவித போட்டிகளிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கேப்டன் பொறுப்பில் இருந்து வந்த சர்பராஸ் அகமது, உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் பாகிஸ்தான் அணி வெளியேற்றப்பட்டதால் இவரின் கேப்டன் பொறுப்பு பெரும் கேள்விக்குறி ஆகியது.

  safarz

  மேலும் உலககோப்பை தொடருக்கு முன்பாகவே பாகிஸ்தான் அணியை சரியாக வழி நடத்தவில்லை என்ற விமர்சனங்களும் இவர் மீது வைக்கப்பட்டு வந்தன.

  இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ள அந்த அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக், அணி வீரர்களிடம் பல மாற்றங்களையும், அணியின் கட்டமைப்பில் சில சீர்திருத்தங்களையும் செய்துவருகிறார். 

  குறிப்பாக வீரர்கள் பலர் உரிய உடல் தகுதியுடன் இல்லை என்பதை உணர்ந்த அவர், அவற்றை மேம்படுத்த உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியில் மாற்றங்களை செய்துள்ளார். மேலும் அணியை வழிநடத்த சிறந்த கேப்டனை தேர்ந்தெடுப்பதில் திட்டங்களை வகுத்து வந்தார். இதற்கு செவி சாய்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்பராஸ் அகமதுவை நீக்கி அவருக்கு பதிலாக டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை அசார் அலிக்கும், டி20 அணியின் கேப்டன் பொறுப்பை பாபர் அசாமிற்க்கும் வழங்கியுள்ளது. 

  safarz and his wife

  இந்நிலையில் அடுத்ததாக பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆட இருக்கிறது. இதற்கான அணியிலிருந்து சர்பராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே இவர் விரைவில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் இருந்தன.

  இதுகுறித்து அவரது மனைவியிடம் கேள்வி நிருபர்கள் எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவரது மனைவி, எனது கணவர் ஓய்வு முடிவு குறித்து இதுவரை எதுவும் குறிப்பிடவில்லை. இந்திய அணியில் தோனி இன்னும் ஓய்வு பெறாமல் இருக்கும் நிலையில், அவரை விட குறைந்த வயதான எனது கணவர் எதற்காக ஓய்வு பெறவேண்டும் என பதில் கேள்வியை எழுப்பியுள்ளார். 

  இதனைக்கண்ட இந்திய ரசிகர்கள் மிகவும் ஆத்திரமடைந்து தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

  -vicky