தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் சார்பில் குறைந்த விலையில் காய்கறி விற்பனை!

  0
  4
   காய்கறிகள் விற்பனை

  கொடைக்கானலில் உள்ள 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த இடங்களில் நகராட்சி சார்பில் காய்கறிகள் விற்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

  இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.  இதனால் தமிழகம் உட்பட பெரும்பாலான இடங்களில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே போல , காய்கறிகள்  விலையும் உயர்ந்துள்ளது.  இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள், விலையை அதிகப்படுத்தி விற்று வந்தனர். இதனை பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு பல புகார்கள் வந்ததையடுத்து, கொடைக்கானலில் உள்ள 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த இடங்களில் நகராட்சி சார்பில் காய்கறிகள் விற்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

  ttn

  அதன் படி கலையரங்கம், அப்சர்வேட்டரி உள்ளிட்ட 5 இடங்களில் காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 2:30 மணி வரை காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த முடிவு கைவிடப்பட்டு தோட்டக்கலை மற்றும்  மலைப்பயிர்கள் சார்பில் குறைந்த விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் காய்கறிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.