தொழுகையில் கொல்லப்பட்ட தொழிலதிபர் -சொத்துக்காக சொந்த மகனும் ,மருமகளும் செய்த செயல் 

  0
  11
  representative image

  அந்த தொழிலதிபர்  மசூதிக்குச் செல்லும் வழியில் புச்சோங் பெர்டானாவில் உள்ள எல்.ஆர்.டி நிலையத்தை கடந்து செல்லும்போது தாக்கப்பட்டார்.இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் இந்த கொலையில்  அவரது மகனுக்கும் மருமகளுக்கும்  தொடர்பிருப்பதாக கண்டுபிடித்தனர் .

  செப்பாங்கில் ,பிப்ரவரி 14 ம் தேதி, 65 வயதான தொழிலதிபர் ஒருவர், வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தச் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத நபரால் வெட்டப்பட்டதால்  இறந்தார்.

  அந்த தொழிலதிபர்  மசூதிக்குச் செல்லும் வழியில் புச்சோங் பெர்டானாவில் உள்ள எல்.ஆர்.டி நிலையத்தை கடந்து செல்லும்போது தாக்கப்பட்டார்.இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் இந்த கொலையில்  அவரது மகனுக்கும் மருமகளுக்கும்  தொடர்பிருப்பதாக கண்டுபிடித்தனர் .

  arrested

  அந்த தம்பதியரை பிப்ரவரி 17 ஆம் தேதி தமன் புச்சோங் பெர்தானாவில் சுபாங் ஜெயா போலீசார் கைது செய்தனர்.இருவரும் பிப்ரவரி 24 வரை ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்

  “நாங்கள் இந்த கொலையின்  நோக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம், எங்களிடம் எந்த தடயமும்  கிடைக்கவில்லை” என்று சிலாங்கூர் சிஐடியின் தலைமை மூத்த உதவி கம்யூனியர் டத்துக் ஃபட்ஸில் அஹ்மத் நேற்று செபாங் போலிஸ் தலைமையகத்தில் தனது பணியை  ஒப்படைத்த பின்னர் கூறினார்.
  செபாங் போலிஸ் தலைமையகத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 19)நடந்த  வழியனுப்பு விழாவில்  முன்னாள் செபாங் காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி அப்துல் அஜீஸ் அலி, 2015 முதல் அவர் பணியாற்றி வந்த பதவியிலிருந்து  விடைபெற்றார்.புதிய செபாங் காவல்துறைத் தலைவராக ஏ.சி.பி வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப் பொறுப்பேற்பார். கடமைகளை ஒப்படைக்கும் விழாவை சிலாங்கூர் காவல்துறை தலைவர் கம் டத்துக் நூர் அசாம் ஜமாலுதீன் மேற்பார்வையிட்டார்.