தொழிற்சாலையில் வெடி விபத்து – 44 பேர் மரணம்

  0
  1
  china chemical blast

  கிழக்கு சீனாவில் நடந்த  வெடி விபத்து ஒன்றில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். 

  சீனா :

  கிழக்கு சீனாவில் நடந்த  வெடி விபத்து ஒன்றில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். 

  கிழக்கு சீனாவின் யான்செங்கில் உள்ள உரப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் நேற்று உள்ளூர் நேரம் பகல் 2.50 மணி அளவில் இந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.

  china chemical blast

  இந்த விபத்தில் 44 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 600 – க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

  உரப்பொருட்கள் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து அந்த இடத்தில் தீ பற்றி எரிந்தது. ரசாயன ஆலையில் ஏற்பட்ட இந்த பெரும் வெடி விபத்தால் அந்த நேரத்தில் அப்பகுதியில் 2.2 அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டதாக  சீனாவின் பூகம்பம் கண்காணிப்பு  நிர்வாக குழு தெரிவித்துள்ளது.

  china chemical blast

  இதனிடையே இந்த பகுதியில் கடுமையாக பற்றி எரிந்த தீ இன்று அதிகாலை 3 மணி அளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.