தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி! மெதுமெதுவாக தளர்த்தப்படும் ஊரடங்கு!!

    0
    2
    தொழிற்சாலை

    உலக நாடுகளை நடுநடுங்க வைக்கும் கொரோனா வைரஸால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்தியா முழுக்கவே மக்கள் வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். மேலும், கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்துவருகின்றன. 

    தொழிற்சாலை

    இந்நிலையில் தமிழகத்தில் சில தொழிற்சாலைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரும்பு, சிமெண்ட், உரம், சர்க்கரை, காகிதம், கண்ணாடி, டயர், சாய தொழிற்சாலைகள், சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயன  மற்றும் ஜவுளி போன்ற 12 துறைகளுடன் தொடர்புடைய தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.