தொல்லை கொடுத்து வந்த ரசிகை: ஹரிஷ் கல்யாண் எடுத்த முடிவால் சண்டைக்கு வந்த தோழி!

  0
  7
  ஹரிஷ் கல்யாண்

  பொண்ணு வேணும் என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இவர் ஏற்கனவே இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் இடம்பெற்ற கண்ணம்மா பாடலை பாடியிருந்தார்.

  நடிகர் ஹரிஷ் கல்யாண்  தனது தோழியை  இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பிளாக் செய்ததால் பெண் ஒருவர் அவருடன் மல்லுக்கட்டியுள்ளார். 

  பியார் பிரேமா காதல்,இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஹரிஷ் கல்யாண்  தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைப் பிரபல இயக்குநர் சந்தான பாரதியின் மகனும், இயக்குநருமான சஞ்சய் பாரதி இயக்கிவருகிறார். ஜிப்ரான் இசையில் உருவாகும் இப்படத்தில்  முனீஷ்காந்த், ரேணுகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  இப்படத்தை ஸ்ரீ கோகுலம் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. 

  harish

  இப்படத்தில்  பொண்ணு வேணும் என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இவர் ஏற்கனவே இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் இடம்பெற்ற கண்ணம்மா பாடலை பாடியிருந்தார். இந்த பாடலானது  இளைஞர்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

  harish

  இந்நிலையில் தனுசு ராசி நேயர்களே படத்தின் பஸ்ட்லுக் போஸ்டரை  நடிகர் சிவகார்த்திகேயன்  நேற்று வெளியிட்டார்.  இதை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் ரசிகர்களுடன் இன்ஸ்ட்ராகிராமில்  லைவ் சாட் செய்தார். அப்போது பெண் ரசிகை ஒருவர், ‘ஆதரவு தருகின்ற நபர்கள் மட்டும் தான் உங்களுக்கு உங்களுக்கு தேவையா? உங்கள் அன்பை எதிர்பார்த்தால் பிளாக் செய்து விடுவீர்களா? அன்பும் ஆதரவும் இரண்டும் வாழ்க்கைக்கு தேவை.அதை கற்றுக்கொள்ளுங்கள்’ என்று ஆவேசமாக பதிவிட, ஹரிஷ் கல்யாணோ, என்னையும் என் ரசிகர்களையும் விமர்சிக்காத வரை நான் யாரையும் பிளாக் செய்வது இல்லை என்று குறிப்பிட்டார்.

  harish

  ஆனால்  அதற்கு பதிலளித்த அந்த பெண், ‘அவள் உங்களிடம் எதிர்பார்ப்பது ஒரு ஆதரவான வார்த்தைகளை தான் அவளுக்கு தனிப்பட்ட முறையில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றது’ என்று கூறினார். இதன் மூலம் ஹரிஷ் கல்யாண் தன்னை தொந்தரவு செய்த  பெண் ஒருவரை பிளாக் செய்திருப்பது தெரியவந்துள்ளது.