தொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு!

  25
  tasmac

  வைட்டமின் சி உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களில் ஒன்று. சிட்ரிக் வகை பழங்களில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி, இதயம் மற்றும் சரும பாதுகாப்பிற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
  நம் உடலில் வைட்டமின் சி குறைவாக இருக்கும் பட்சத்தில் அடிக்கடி நோய் தொற்றுகளுக்கு நாம் ஆளாக நேரிடும். ஏனெனில் வைட்டமின் சி சத்துக்கள் தான் அதிகளவில் நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. 

  இன்று பெரும்பாலோனோர் தொப்பையைக் குறைக்க காலை வேளைகளில் கைகளில் நாய்க்குட்டியோடு கடற்கரையிலும், பூங்காக்களிலும் வாக்கிங் போகிறார்கள். இவர்கள் தொப்பை அதிகமாகி விடக்கூடாதே என்று சில உணவு வகைகளைத் தவிர்த்து விடுவார்கள். ஆனால், உடலில் போதிய அளவில் வைட்டமின் சி இருக்கிறதா என்பதைக் கவனத்தில் கொள்ள மாட்டார்கள். மாறாக, வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டாலே தொப்பை குறைய துவங்கும்.

  Vitamin c

  வைட்டமின் சி குறைபாட்டால், காரணமின்றி திடீரென உடல் எடை கூடும். குறிப்பாக அடிவயிற்றை சுற்றிலும் கொழுப்புகள் படிய ஆரம்பித்து பின் நிரந்தரமாக தங்கி தொப்பை விழ துவங்கும்.  உணவு கட்டுப்பாடு இருந்தும் சிலருக்கு தொப்பை விழ காரணம் வைட்டமின் சி குறைபாடு தான் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். 
  வைட்டமின் சி பற்றாக்குறை உள்ளவர்கள் எப்போதும் சோர்வுடன் காணப்படுவார்கள் . அதோடு எரிச்சல் ஊட்டும் உணர்வுடனும், கோபமான உணர்வுடனும் இருப்பதற்கும் வைட்டமின் சி குறைபாடே காரணம்.