தொண்டை, மார்பு சளியை விரட்டும் மிளகுக் குழம்பு!

  0
  2
  மிளகுக் குழம்பு

  பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்று மிளகின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துவதற்காக நமது முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். மிளகுக் குழம்பு சாப்பிட்டால் தொல்லைப்படுத்தும் சளி வெளியேறி விடுகிறது. குரல் பிசிறில்லாமல் சரியாகிவிடுகிறது. நீண்ட நாட்களாக இருந்து வரும் அலர்ஜி போன்றவை சரியாகும்.

  milagu kulambhu

  தேவையான பொருட்கள்
  புளி        -சிறிய எலுமிச்சை அளவு
  மிளகு    -1டேபிள்ஸ்பூன்
  உளுத்தம் பருப்பு    -1டீஸ்பூன்
  வெல்லம்    -சிறு துண்டு
  எண்ணெய்    -2டீஸ்பூன்
  மிளகாய்பொடி-1/2டீஸ்பூன்
  பெருங்காயம்    -சிறுதுண்டு
  செய்முறை
  புளியைக் கரைத்து உப்பு கலந்து கொதிக்க வைக்க வேண்டும். மிளகு,பெருங்காயம், உளுத்தம் பருப்பு, மிளகாய்ப் பொடி இவற்றை வறுத்துப் பொடிக்க வேண்டும். இந்த புளித்தண்ணீரில் அரைத்து வைத்திருக்கும் பொடியைப் போட்டு ஒரு கொதி வந்ததும் வெல்லத்துண்டை போட்டு இறக்கி விட வேண்டும். கமகமவென்று சுவையான மிளகுக் குழம்பு தயார். இந்த மழைக்காலத்திற்கு ஏற்றது!