தொண்டையில் கேக் சிக்கி பலியான பெண்…போட்டியால் நடந்த விபரீதம்!

  0
  5
  கேக்

  இதனால் குயின்ஸ்டேண்டில் உள்ள ஹர்வேபே என்ற ஹோட்டலில் கேக் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது.

  கடந்த 26 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இதனால் அங்கு கொண்டாட்டம் களைகட்டியது. இதனால் குயின்ஸ்டேண்டில் உள்ள ஹர்வேபே என்ற ஹோட்டலில் கேக் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது.

  ttn

  அதில் பலரும் கலந்து கொண்டனர். இந்த போட்டியில்  ஆஸ்திரேலியா நாட்டின் புகழ்பெற்ற கேக்கான லேமிங்டனை சாப்பிட வேண்டும். தேங்காய் துருவல்கள், சாக்லேட் நிறைந்த இந்த கேக்கை குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிகம் சாப்பிடுபவர்களே  வெற்றியாளர்கள் என்ற விதிமுறை வைக்கப்பட்டது. 

  ttn

  இந்நிலையில் இந்த போட்டியில் கலந்துகொண்ட  60 வயது பெண்ணுக்கு  கேக் சாப்பிடும் போது  தொண்டையில் சிக்கி கொண்டது. இதனால் அந்த பெண் மயக்க நிலைக்கு சென்றார். உடனடியாக அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது  அவர் உயிரிழந்தது தெரியவந்தது. அந்த பெண்ணின் இறப்பிற்கு ஹோட்டல் நிர்வாகம்  இரங்கல் தெரிவித்துள்ளதோடு அவரின் குடும்பத்துக்கும்  ஆறுதல் கூறியுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.