தொண்டர்களால் நாங்கள்… தொண்டர்களுக்காகவே நாங்கள்… ஜெயலலிதா பாணியில் ஓபிஎஸ் அதிரடி

  0
  12
  OPS

  அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை  என துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

  அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை  என துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

  பொதுக்குழு கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னிர்செல்வம், “இடைத்தேர்தல் வெற்றி மூலம் என்றும் அதிமுகதான் ஆட்சி அமைக்கும் என மக்கள் காண்பித்துள்ளனர். நல்லாட்சியில் வெற்றி பெற்ற நாம் உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெறவேண்டும். இடைத்தேர்தல் வெற்றி மூலம் என்றும் அதிமுகதான் ஆட்சி அமைக்கும் என மக்கள் காண்பித்துள்ளனர். அதற்கு நாம் ஒற்றுமை உடன் இருக்க வேண்டும். தொண்டர்களால் நாங்கள்… தொண்டர்களுக்காகவே நாங்கள்… தொண்டர்கள் தான் இயக்கத்தின் இதயம். அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை..

  OPS

  உள்ளாட்சி தேர்தலில் நாம் மகத்தான வெற்றியை நாம் பெறுவது தான், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நாம் செய்யும் மரியாதை. இந்த வெற்றியை ஜெயலலிதாவுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும். வலுவாக ஆட்சி நடைப்பெற்று நல்ல திட்டங்கள் மக்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கும் நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் என்ன தேவையோ அதை அளித்துவருகிறோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறு சரிவு ஏற்பட்டது. ஆனால் அது வேலூர் தேர்தலில் சரி செய்யப்பட்டது.  தமிழ்நாட்டின் ஜீவாதாரண பிரச்சனை காவேரி பிரச்சனையில் வெற்றி பெற்றுள்ளோம். ஜல்லிக்கட்டில் வரலாற்று புரட்சி படைத்துள்ளோம். எய்ம்ஸ் மருத்துவமனை, 6 மருத்துவ கல்லூரியையும் மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளோம்” என தெரிவித்தார்.