தொட்டபெட்டா ரோட்டு மேல  முட்ட பரோட்டா முதல் செல்பிபுள்ள வரை…. விஜயின் குரலில் அதிர்ந்த பாடல்கள்! 

  0
  13
  விஜய்

  விஜய் நடிப்பு மட்டுமில்லாமல்ல நடனம், பாடல் என அனைத்திலும் கைதேர்ந்த மல்ட்டி டாஸ்கர்.

  விஜய் நடிப்பு மட்டுமில்லாமல்ல நடனம், பாடல் என அனைத்திலும் கைதேர்ந்த மல்ட்டி டாஸ்கர். விஜயும் கமல்ஹாசன், தனுஷ் போல தனது படங்களில் தானே நிறைய பாடல்களை பாடி அதில் ஹிட்டும் அடித்துள்ளார். அவருடைய படம் மட்டுமின்றி விஜயகாந்த் மற்றும் சூர்யா இணைந்து நடித்த ‘பெரியண்ணா’ படத்தில் சூர்யாவுக்காக பாடல்களை பாடியுள்ளார். மேலும் வேலை என்ற படத்திற்காகவும் ஒரு பாடலை பாடியுள்ளார். சமீபத்தில் பாடிய வாங்கண்ணா வணக்கங்கண்ணா… செல்பி புள்ள… பாப்பா பாப்பா இந்த பாடல்களெல்லாம் மாஸ் ஹிட்… 

  இளையதளபதி விஜய் பாடிய பாடல்கள் 30க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியுள்ளார். பிரபல இசையமைப்பாளர்களின் ஆதரவு, விஜயின் இனிமையான குரலுமே இத்தனை பாடல்களுக்கு மெகா ஹிட்டை கொடுத்தன. 

  முதன்முதலாக 1994 ஆம் ஆண்டு தேவா என்ற தேவா என்ற படத்திற்காக கோத்தகிரி குப்பம்மா…. கோவப்பட்டா தப்பம்மா என அழகாக தனது குரலுக்கு எண்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு அதே படத்தில் அய்யய்யா அலமேலு ஆவின் பசும்பாலு … தொட்டுப்புட்டா கொட்டிபுடும் தேலு என்ற பாடலை நாசுக்கான துள்ளல் நடையுடன் பாடி அசத்தினார். விஜயின் குரலும், நடனமும் இந்த பாடல் ஹிட் ஆனதுக்கு கூடுதல் பலமாக இருந்தது. இதையடுத்து அதே ஆண்டு வெளியான விஷ்ணு படத்தில்  தொட்டபெட்டா ரோட்டு மேல  முட்ட பரோட்டா… நீ தொட்டுகொள்ள சிக்கன் தரட்டா… என்ற சுவையான பாடலை பாடி அசத்தினார். 

  இதேபோல் 1995 ஆம் ஆண்டு வெளியான கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி… லவ் பன்னாலும் ஜாலி… என டிஃபரண்டான டிஸ்கோ பாடலை பாடி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார். இதை தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு வெளிவந்த மாண்பு மிகு மாணவர் படத்தில் வரும் திருத்தணி போன  பட்ட பட்ட…. திருப்பதி போனா மொட்ட மொட்ட… படிப்புல நாங்க முட்ட முட்ட என சாமியார் ரூபத்தில் பாட்டைப்போட்டு அசத்தினார். இதையடுத்து அதே ஆண்டு வெளியான காலமெல்லாம் காத்திருப்பேன் என்ற படத்தில் வரும் அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி என்ற பாடலை பாடினார். 

  vijay

  இதையடுத்து 1997 படத்தில் செல்வா படத்தில்வரும் சிக்கன் கரே, ஒன்ஸ் மோர் படத்தில்வரும் ஊர்மிளா ஊர்மிளா ஆகிய பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து அதே ஆண்டு வெளிவந்த காதலுக்கு மரியாதை படத்தில் வரும் என்னை தாலாட்ட வருவாளா மற்றும் ஓ பேபி ஆகிய இரண்டு பாடல்களுமே பெரிய அளவில் ஹிட் அடித்து விஜயின் பாடகர் வாழ்வில் திருப்பு முனையாக இருந்தது. இதையடுத்து 1998 ஆம் ஆண்டு வெளிவந்த பெரியண்ணா, நிலாவே வா மற்றும் துள்ளி திரிந்த காலம், நெஞ்சினிலே மற்றும் பிரியமுடன் ஆகிய அத்துனை படத்திலும் தனக்கான குரலை பதிவு செய்திருந்தார். அதில் பெரியண்ணா படத்தில் வரும் தம்மடிக்கிற ஸ்டைல பாத்து பாடல் மாஸ் ஹிட் பாடலாக இன்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகவே உள்ளது.  

  vijay

  இதைதொடர்ந்து 2000 ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணுக்குள் நிலவு படத்தில் இரவு பகலை…. என தொடங்கும் பாடலையும் சின்னஞ்சிறு என தொடங்கும் பாடலையும் பாடினார்.  2001 ஆம் ஆண்டு வெளிவந்த பிரியமானவளே படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளார். பத்ரி படத்தில் என்னோட லைலா வராலே லைலா என்ற பாடலும் மாஸ் ஹிட்…. இதேபோல் பகவதி படத்தில் வரும் போடாங் கோ,… கோடங்கோ… கொக்கக்கோலா பிரவுன் கலருடா.  என் அக்கா போன்னும் அதே கலருடா… பாடலும் இன்றும் பல இளைஞர்களின் ரிங்டோனா ஒளித்துக்கொண்டிருக்கிறது. சச்சின் படத்தில் வரும் வாடி வாடி வாடி கைப்படாத சீடி… பாட்டும் பக்கா மாஸ்… துப்பாக்கி படத்தில் வரும் கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன் உலகத்துல பாடலும் இளம் ரசிகர்களை துள்ளல் நடைப்போட வைத்தது. அதுமட்டுமின்றி தலைவா படத்தில் வரும் வாங்கண்ணா வணக்கங்கண்ணா எண்ட்ரி பாட்டும் ரசிகர்களின் ஆரவாரத்தை பெற்றது. ஜில்லா படத்தில் வாரும் கண்டாங்கி… கண்டாங்கி கட்டிவந்த பொன்னு…. கத்தியில் வரும் செல்பி புள்ள… பைரவா படத்தில் வரும் பாப்பா… பாப்பா… பாடலும் சம மாஸ் ஹிட் அடித்து இன்றும் பலரது வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ்களில் வலம்வந்து கொண்டிருக்கிறது.