தொடர் மழையால் வெள்ள அபாய எச்சரிக்கை! பரிதவிக்கும் மக்கள்!

  0
  2
  நீலகிரி

  வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வருகிறது.

  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஏற்கெனவே தென்மேற்கு பருவமழையினால் பாதிப்புக்குள்ளான நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையும் மக்களை பதம் பார்த்து வருகிறது. வழக்கமான அளவை விட 30 சதவீதம் கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழையினால் நீலகிரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வருகிறது.

  nilgiri

  நேற்று இரவு முழுவதும் இடியுடன் கொட்டிய கனமழையினால் உதகையில் இருந்து மஞ்சூர் வரை நெடுஞ்சாலையில் 54 இடங்களில் அந்த பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனியாக போக்குவரத்தின்றி துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால்  மக்கள் கடும் அவதிக்குள்ளான நிலையில், பாறைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
  தொடர்ந்து கொட்டித் தீர்க்கும் கனமழையால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பர் பவானி, குந்தா, அவலாஞ்சி அணைகள் நேற்று மாலையில் திறக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் 40 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.