தொடர் சரிவிலிருந்து மீளுமா பங்கு வர்த்தகம்….. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு?….

  0
  1
  மும்பை பங்குச் சந்தை

  கொரோனா வைரஸ், வாகன விற்பனை நிலவரம் உள்ளிட்டவை இந்த வார பங்குவர்த்கத்தின் போக்கினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

  நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. முடக்கத்தால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வர்த்தகம் படுத்து விட்டது. வருவாய் இல்லாததால் பல நிறுவனங்கள் நிலைகுலைந்து உள்ளன. ஆக, இந்த வாரமும் கொரோனா வைரஸ் நிலவரம் இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

  கொரோனா வைரஸ்

  ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்தது, 3 மாதங்களுக்கு கடன் வசூலிக்க கூடாது என்ற அதன் உத்தரவு கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏழை மக்களை கருத்தில் கொண்டு ரூ.1.70 லட்சம் கோடி நிவாரண திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. வரும் நாட்களில் இவை பங்கு வர்த்தகத்தில் இவை பங்குவர்த்தகத்தில் எதிரொலிக்கலாம். இந்த வாரம் வாகனம் மற்றும் சிமெண்ட் நிறுவனங்களின் மார்ச் மாத விற்பனை தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளிவர உள்ளது. இதுவும் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

  இந்திய ரிசர்வ் வங்கி

  அன்னிய முதலீட்டாளர்கள் இந்த மாதம் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். இதுவும் பங்குச் சந்தைகளின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தது. வரும் நாட்களில் அவர்கள் இந்திய பங்குகளில் முதலீட்டை அதிகரிக்க தொடங்கினால் பங்கு வர்த்தகத்தின் போக்கில் மாற்றம் ஏற்படும். சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ளது. 

  பெட்ரோலிய கச்சா எண்ணெய்

  இதுதவிர அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் நிலவரங்கள் உள்ளிட்டவையும் இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.